Tuesday, April 22, 2014

Kamaraj Simplicity !!

1.சட்டை பையில் ..........................ரூபாய் 100
2.வங்கிகணக்கில்..........................ரூபாய் 125
3.கதர் வேட்டி....................................................4
4.கதர் துண்டு ...................................................4
5.கதர் சட்டை....................................................4
6.காலணி.............................................ஜோடி 2
7.கண் கண்ணாடி .............................................1
8.பேனா ..............................................................1
9.சமையலுக்கு தேவையான பத்திரங்கள் -6

இது யார் சொத்து விபரம் தெரியுமா?
பத்து ஆண்டுகள் தமிழக முதல்வராகவும்,பல ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவரகவும் இருந்து இந்தியாவில் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய பெருந்தலைவர் காமராசர் மறைந்த போது அவரிடம் இருந்த மொத்த இருப்பே இது தான்......

.இன்றைய அரசியல் வாதிகளுக்கு இவர் பெயரை சொல்லவே அருகதை கிடையாது

Friday, April 18, 2014

விவேகானந்தர் - இதுதான் அறிவின் முதிர்ச்சி..

விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.
அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.
நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்.
என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி.
அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.
அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதை விட என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.
இன்று முதல் நான் உன்னை “தாயே” என்றே அழைக்கிறேன் என்று கூறினார்..
இதுதான் அறிவின் முதிர்ச்சி.....
ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,அவரது மனத்தைக் காயப் படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு..

Wednesday, April 2, 2014

கவிஞர் கண்ணதாசன் வாழ்வில்.. அவமானம் ஒரு மூலதனம் !!!

கவிஞர் கண்ணதாசன் வாழ்வில்.. அவமானம் ஒரு மூலதனம் !!!
செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச்
சென்னை வந்தார் கவிஞர்.

அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர்.
நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும்.
இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின்
கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது.

""படு...படுக்கண ும்னா நாலணா கொடு'' என்று காவல் மிரட்டியது.
நாலணாவுக்கு வழியின்றி கலங்கிய கண்களுடன் காந்தி சிலையிலிருந்து நடந்திருக்கிறார் கவிஞர்.
அவர் வளர்ந்து கவியரசர் கண்ணதாசன் என்று பெயர் பெற்று "சுமைதாங்கி' என்ற சொந்தப்படம் எடுக்கிறார்.
கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார். நள்ளிரவு ஷூட்டிங்.
ஆனால் படத்தில் இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும்.

ஏழு கார்களை நிற்க வைத்து மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக
வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள்.
வீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர் தன் பின்ளைகளைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார். ""இந்தக்
கார்களை கவனித்தீர்களா..? இவை எல்லாமே நம்முடைய கார்கள்.
வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்பதற்காகப் போலீஸ் நடக்கவிட்டது.

இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன்.
நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது!'' என்றாராம்!
எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவிஞர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார்.
அவமானம் ஒரு மூலதனம்...
இது புரிந்தால் வெற்றி நிச்சயம்!